தேசிய மக்கள் சக்தியின் வார்த்தை ஜாலங்களுக்கு ஏமாற வேண்டாம் – அலி சப்ரி

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கவர்ச்சிகரமான வசனங்களுக்கு ஏமாறுமிடத்து, நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதை தவிர்க்க முடியாது என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

செலவுகள் அதிகரிப்பதாயின் அதற்குச் சமாந்தரமாக வருமானமும் அதிகரிக்க வேண்டும். குறைந்த அளவான வருமானம் கிடைக்கும்போது செலவுகளை அதிகரிக்க முடியாது. அவ்வாறாயின், பணத்தை அச்சிட நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய வங்கி சட்டமூலத்தின் பிரகாரம் பணம்; அச்சடிக்க முடியாது. இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் பிரகாரம் செயற்படாவிடத்து, டிசெம்பர் மாதத்தில் கிடைக்கவிருக்கும் 400 மில்லியன் டொலர் கிடைக்காது என்றும் அமைச்சர் கூறினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )