மக்களை ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஐக்கிய தேசியக் கட்சி

ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், மக்களுக்கு சேவையாற்ற கூடிய, ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும்.

பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

வேட்பாளர்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினாலும், அவற்றை நிறைவேற்ற முடியாது என அவர் தெரிவித்தார்.

வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரணில் விக்கிரமசிங்க எந்த சந்தர்ப்பத்திலும் செய்ய முடியுமானவற்றை மாத்திரமே தெரிவிப்பார்.

இது ஒரு தலைவரிடம் இருக்க வேண்டிய உயர்ந்த பண்பாகும் என்றும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )