தபால் மூல வாக்குச் சீட்டுகள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பாதுகாக்கப்பட்ட பொதிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர், வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ள அரச நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஏழு இலட்சத்து 12 ஆயிரத்து 318 அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 4ஆம், 5ஆம், 6ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )