சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய தலைவர் போட்டியின்றித் தெரிவு
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய தலைவராக ஜெய்ஷா போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதலாம் திகதி இந்தப் பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள இருக்கின்றார்.
35 வயதான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமைப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட மிகவும் வயது குறைந்த அதிகாரியாக கருதப்படுகின்றார். இவர் தற்சமயம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
பேரவையின் தலைமைப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட ஐந்தாவது இந்தியராகவும் ஜெய்ஷா கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES விளையாட்டு