சுயேச்சை வேட்பாளராக திரு.ரணில் கட்சியின் விசேட மாநாட்டில் தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டார்.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார உரையாற்றும் போது, அதல பாதாளத்தில் வீழ்ந்த நாட்டை தூக்கி நிறுத்த முன்வந்த ஒரே தலைவர் திரு.ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என குறிப்பிட்டார். தற்போதைய நிலையில் நாட்டுக்கு பொருத்தமான தலைவர் அவரே என குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் திரு. ரணில் விக்கிரமசிங்கவை சுயேச்சை வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான மாநாட்டுப் பிரேரணையை பாலித ரங்கே பண்டார முன்வைத்ததுடன், கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்கவினால் அது வழிமொழியப்பட்டது.

ஏற்றுமதியை அபிவிருத்தி செய்து நாட்டை முன்னேற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளதாக, மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் திரு.ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கட்சி, எதிர்ப்பு எதுவாக இருந்தாலும் திரு.விக்கிரமசிங்க தலைமைத்துவத்திற்கு பொருத்தமானவர் என்பதை இன்று அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர் என கட்சியின் பிரதி தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கட்சியின் தேசிய அமைப்பாளர் திரு.சாகல ரத்நாயக்க, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் ஜனாதிபதியின் பணிகளையும் இதன்போது நினைவுகூர்ந்தார்.

சவால்களை ஏற்றுக்கொண்டு சிறந்த தலைவர்களை உருவாக்கிய கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியை குறிப்பிட முடியும் என அக்கட்சியின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

மக்களின் துன்பங்களை அறிந்துதான் திரு.விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கு செல்ல இடமளிக்கக் கூடாது எனவும், அதனை ஜனாதிபதி கையாண்ட விதம் குறித்தும் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

விக்கிரமசிங்க கட்சியின் ஒரே தலைவர் என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )