பரா ஒலிம்பிக்கில் இலங்கை சார்பில் எட்டு வீரர்கள் பங்கேற்பு

2024 பராலிம்பிக் தொடரில் இலங்கையைச் சேர்ந்த எட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

பராலிம்பிக் தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி வரை பரிஸில் நடைபெறவுள்ளது.

இதில் 189 நாடுகளைச் சேர்ந்த நான்காயிரத்து 500 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கை அணியின் தலைவராக சஜித் துலான் செயற்படுவார். நுவன் இந்திக, பாலித பண்டார, அனில் ஜயலத், பிரதீப் சோமசிறி, சுரேஷ் தர்மசேன, நவீத் ரஹீம், ஜனனி தனஞ்சன ஆகியோர் ஏனைய வீரர்களாவர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )