இலங்கை Vs இங்கிலாந்து: இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி

சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

205 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை தாண்டியது. இங்கிலாந்து அதன் முதல் இனிங்சில் 358 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி அதன் முதல் இனிங்சில் 236 ஓட்டங்களையும் இரண்டாவது இனிங்சில் 326 ஓட்டங்களையும் பெற்றிருந்தது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )