தபால் மூல வாக்குச் சீட்டு பொதிகள் நாளை தபாலில் சேர்க்கப்படும்

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பொதிகள் நாளை தபாலில் சேர்க்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தபால் வாக்குக் சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கை நிறைவடைந்ததும், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அவை அனுப்பப்படும்.

அடுத்த மாதம் 4ஆம். 5ஆம், 6ஆம் திகதிகளில் தபால்மூல வாக்குகளிப்பு இடம்பெறவுள்ளது. அந்த தினங்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 11ஆம், 12ஆம் திகதிகளில் மாவட்டச் செயலகங்களில் வாக்களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஏழு இலட்சத்து 12 ஆயிரத்து 319 அரச ஊழியர்கள் தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )