தமது அரசாங்கத்தின் கீழ் சிறந்த பொதுச் சேவை -சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சிறந்த பொதுச் சேவை அமுல்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி பயிற்சி வழங்கப்படும். அடுத்தாண்டு முதல், ஒட்டுமொத்த அரசு ஊழியர் சம்பளம் 24 சதவீதம் உயரும்

அரச ஊழியர்கள் தற்போது பெறும் 17,800 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 25,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். வரக்காபொல நகரில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )