நிறுவனங்களின் இறுதி கணக்காய்வு அறிக்கைகளுக்கு விருது
ஒவ்வொரு நிறுவனங்களினதும் வருட இறுதி கணக்காய்வு அறிக்கைகளை மதிப்பீடு செய்து விருது வழங்கும் வைபவம் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடத்த இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனம் திட்டமிடுகிறது. இதற்கு கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையம் பிரதான பங்களிப்பை வழங்குகிறது. பத்தாண்டுகளுக்கு முன்னர் கணக்காய்வு அறிக்கைகளை மதிப்பீடு செய்து விருது வழங்கத் தொடங்கிய பின்னர்இ இந்த அறிக்கைகளின் தரம் உயர்ந்துள்ளதாக பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் தலைவர் டில்ஷான் வீரசேகர தெரிவித்தார். நிதி சாராத விடயங்களிலும் கவனம் செலுத்துமாறு 2022ஆம் ஆண்டு வழிகாட்டல் வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக தரம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
CATEGORIES வர்த்தகம்