EKRO Lanka Trading தனியார் நிறுவனத்துக்கு BWIO தங்கப் பதக்க விருது

EKRO Lanka Trading தனியார் நிறுவனத்துக்கு BWIO தங்கப் பதக்க விருது

EKRO Lanka Trading தனியார் நிறுவனம் BWIO 2025 விருது விழாவில் சாதனங்கள், பொறித்தொகுதிகள் மற்றும் துணைப் பாகங்கள் பிரிவில் சிறந்த இறக்குமதியாளர் மற்றும் விநியோகஸ்தருக்கான தங்கப் பதக்க விருதை வென்றுள்ளது. Business World International Organization அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி விருது விழா கல்கிஸ்ஸ பெரிய ஹோட்டலில் நடைபெற்றது. அதன் முகாமைத்துப் பணிப்பாளர் திரு சுரஞ்சித்துக்கு அந்த விருது வழங்கப்பட்டது. குருணாகலவில் அமைந்துள்ள EKRO Lanka Trading நிறுவனம் கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியில் உயர் தரத்திலான கைக் கருவிகள், மின்சார சாதனங்கள், பொறித்தொகுதிகள் மற்றும் துணைப்பாகங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனமாக மக்களிடையே பெரும் நம்பிக்கையை வென்றதொரு நிறுவனமாகும். இந் நிறுவனம் கமத்தொழில், கட்டுமானங்கள், உணவு உற்பத்தி போன்ற கைத்தொழில்கள் மற்றும் குடிமனைத் தேவைகளுக்கு உதவும் உற்பத்திகள் பலவற்றை சீனாவிலிருந்தும் வியட்னாமிலிருந்தும் நேரடியாக இறக்குமதி செய்கிறது.

உயர் தரத்திலான உற்பத்திகளையும் சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்தும் EKRO Lanka Trading நிறுவனம் சகல உற்பத்திகளினதும் உயர் தரத்தை உறுதிப்படுத்துவதோடு சகல சாதனங்கள் மற்றும் பொறித்தொகுதிகளுக்கு விற்பனைக்கு பிந்திய சேவையினையும் வழங்குகிறது. விவசாயிகள், ஒப்பந்தக்காரர்கள், இதர கைத்தொழிலாளர்களுக்கு தேவையான சகல சாதனங்களையும் பொறித்தொகுதிகளையும் மேற்படி நிறுவனத்தில் நேரடியாகவும் www.ekrolanka.com இணையதளத்தின் ஊடாகவும் கொள்வனவு செய்ய முடியும். அனுபவமிக்க பணியாட்டொகுதியினர் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ற சாதனங்களையும் பொறித்தொகுதிகளையும் தெரிவு செய்வதற்கு அவர்களுக்கு உதவுவார்கள். அவற்றை பயன்படுத்தும் விதம் மற்றும் பாவனையின் போது ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் தொடர்பாகவும் அவர்கள் வாடிக்கையாளர்களை அறிவுறுத்துவார்கள். நாடளாவிய விநியோக வலையமைப்பை கொண்ட EKRO Lanka Trading நிறுவனம் நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையை வென்றுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருதுகள் பலவற்றை வென்றுள்ள இந் நிறுவனம் வருங்காலங்களில் தமது உற்பத்திகளின் பரம்பலை மேலும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. https://www.facebook.com/share/18czZnAPLR/ ஊடாக இந் நிறுவனத்தின் முகநூல் பக்கத்தை பார்வையிட முடியும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )