ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று.
ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய அணிகள் இதற்கு தகுதி பெற்றுள்ளன.
அரையிறுதிச் சுற்றில் ஹொங்கொங் அணி இலங்கையிடமும், மலேசியா அணி சிங்கப்பூரிடமும் தோல்வியடைந்தன.
ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தொடர்ச்சியாக 7ஆவது தடவையாகவும் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES விளையாட்டு