மேற்கிந்திய தீவுகள் – இலங்கை அணி: கிரிக்கெட் போட்டி இன்று

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் – இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது வு-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி இரவு ஏழு மணிக்கு தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கை அணிக்கு சரித் அஸலங்க தலைமை தாங்கவுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையில் 3 ரி-20 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

அதனைத் தொடர்ந்து கண்டி பள்ளேகல மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )