இஸ்ரேலில் மேலும் 36 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு.

இஸ்ரேலில் வீட்டு பராமரிப்பாளர் தொழிலுக்காக மேலும் 36 இலங்கையர்களுக்கு நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

அவர்களில் 29 பெண்களும் ஏழு ஆண்களும் அடங்குவர். இவர்கள் எதிர்வரும் 14ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் 198 இலங்கையர்கள் இஸ்ரேலில் வீட்டு பராமரிப்பாளர் வேலைக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இதுவரை ஆயிரத்து 732 பேர் அந்தப் பணிகளுக்காக இஸ்ரேல் சென்றுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )