இருதரப்பு வர்த்தக உடன்படிக்கையை வலுப்படுத்த பங்களாதேஷ் இணக்கம்

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியஸ் இன்று முற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.

பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் மொஹமட் யூசுப் இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் சமகால அரசியல் நிலவரம் பற்றி இலங்கை ஜனாதிபதியும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பங்களாதேஷில் வேலை செய்யும் இலங்கை தொழிலாளர்கள் பற்றிய நலன்களும், பங்களாதேஷில் இலங்கை முதலீடுகள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டன.

வர்த்தக பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இலங்கை பங்களாதேஷ் வர்த்தக உடன்படிக்கையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப் போவதாக இருதரப்பினரும் உறுதியளித்தார்கள்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )