சதோச நிறுவனம் பல்வேறு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

லங்கா சதோச நிறுவனம் எட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைத்திருக்கின்றது. நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அமுற்படுத்தப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டிருக்கின்றது.

ஒரு கிலோ வெள்ளை கௌபியின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரியவெங்காயத்தின் மொத்த விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டிருக்கின்றது.

ஒரு கிலோ கிரி சம்பா அரிசியின் விலை 260 ரூபாவில் இருந்து 254 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )