விசா நெருக்கடியினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் ஏற்பட்ட விசா நெருக்கடியினால், 70 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரவில்லை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதன் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது.
தற்சமயம் பழைய முறையின் கீழ், விசா வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் சுற்றுலாத்துறையில் மறுமலர்ச்சி ஏற்படும் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிவந்த விசா நெருக்கடியுடன் தொடர்புடைய கணக்காய்வுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யு.பி.சி.விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
அடுத்த பாராளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னர் கணக்காய்வுப் பணிகளை பூர்த்தி செய்வது இலக்காகும். இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை வழங்குவதுடன் தொடர்புடைய கொள்வனவு அறிவித்தலின் கணக்காய்வு அறிக்கையும் இதன் கீழ், பூர்த்தி செய்யப்படவிருக்கிறது.
விசாவை விநியோகிக்கும் பணிகளை இந்திய நிறுவனத்திடம் வழங்கியதன் பின்னர் ஏற்பட்ட செலவுகள் பற்றிய கணக்காய்வுகளும் இதில் உள்ளடக்கப்படும் என்று கணக்காய்வாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
000
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )