டொலர் ஒன்றின் விற்பனை விலை வீழ்ச்சி

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 300 ரூபாவைவிடக் குறைவடைந்துள்ளது. 2023ஆம் ஆண்டு ஜுன் மாதம் எட்டாம் திகதியின் பின்னர் தற்போதே இவ்வாறு டொலரின் விற்பனை விலை குறைவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டிருக்கும் நாணயமாற்று விகிதத்தின்படி டொலரின் கொள்விலை 290 ரூபா 30 சதம். அதன் விற்பனை விலை 299 ரூபா 35 சதமாகும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )