சூறாவளியினால் மியன்மாரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு.

யாகி சூறாவளியினால் மியன்மாரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 236ஆக உயர்வடைந்துள்ளது. 80ற்கும் அதிகமானோர் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சூறாவளியினால் மியன்மாரில் வெள்ளப்பெறுக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பல கிராமங்கள் பாதிக்கப்பட்டன.

பெருமளவிலான விளைச்சல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மியன்மாரில் 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.

யாகி சூறாவளி இந்த மாத ஆரம்பத்தில் வியட்னாம், லாவோஸ், தாய்லாந்து மற்றும் மியன்மார் போன்ற நாடுகளை ஊடறுத்துச் சென்றது. இதனால் இந்த வலயத்தில் 500ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )