இலங்கைVs  நியுசிலாந்து: முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை 

நியூசிலாந்து அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடரில் விக்கெட் காப்பாளராக குசல் மெண்டிஸை பயன்படுத்தியமை மற்றுமொரு திறமையான வீரருக்கு அநீதி இழைப்பதாக அமைந்துள்ளது என விளையாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த டெஸ்ட் தொடரில் விக்கெட் காப்பாளராக குசல் மெண்டிஸ் செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் உபுல் தரங்கா தெரிவித்துள்ளார். குசல் மெண்டிஸின் தொடர் தோல்வியால் இலங்கை அணி பல போட்டிகளில் தோல்வியடைந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை அணியில் விக்;;;கட் காப்பிலும், துடுப்பாட்டத்திலும் திறமையான வீரர்கள் பலர் இருக்கின்ற போதிலும், குசல் மெண்டிசுக்கு இத்தனை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு சுயாதீன தெரிவுகளை மேற்கொள்கிறதாக என்பதில் சந்தேகம் எழுந்துள்ளன.

இந்தநிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்;ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )