Daya Electrical உடன் கை கோர்க்கும் சீன நிறுவனம்

சீனாவின் மின் விளக்குகள் உற்பத்தி நிறுவனமான Ledvance Lighting SHENZHEN கம்பனி லிமிடெட் தனது உற்பத்திகளை இலங்கையில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறது.
Osram மற்றும் Ladvance எனும் வர்த்தக நாமத்தில் இந்த உற்பத்திகள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன.
SHENZHEN, நிறுவனத்தின் இலங்கைக்கான ஏக விநியோகஸ்தராக Daya Electrical தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
Daya Electrical, இலங்கையில் அனைத்து விதமான மின் விளக்குகள், அழங்கார மின் விளக்குகள் மற்றும் LED மின் விளக்குகளை சந்தைக்கு விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )