தபால் மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான இறுதி சந்தர்ப்பம் இன்று

தபால் மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான இறுதி சந்தர்ப்பம் இன்று

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக தபால்மூல வாக்களிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் வாக்களிக்காதவர்களுக்கு இன்று வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த 4, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அன்றைய தினங்களை தவறவிட்டவர்கள் தங்கள் பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்களிக்கலாம்.

தபால் வாக்குகளைப் பயன்படுத்தும் போது உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமாகும்.

தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம், கடவுச்சீட்டு அல்லது தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றையும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )