பெருந்தோட்ட மக்கள் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளராக மாற்றப்படுவார்கள் – சஜித்

நுவரெலியா மாவட்டத்தில் கைத்தொழில்களுக்கு மறுமலர்ச்சி ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இளைஞர் சமூகத்தின் அபிவிருத்திக்காக தமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக நுவரெலியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

நுவரெலியா விவசாயிகளின் கரங்களை பலப்படுத்தும் யுகம் எதிர்காலத்தில் உருவாகும். நுவரெலியா மாவட்டம், நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்கும் மாவட்டமாக மாற்றப்படும்.

தமிழ் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த விசேட வேலைத்திட்டமும் அறிமுகப்படுத்தப்படும். தோட்டபுற மக்களுக்கு வீடு மற்றும் காணி உரிமையை வழங்கி, சிறு தேயிலை தோட்ட உரிமையாளர் அந்தஸ்தும் அவர்களுக்கு வழங்கப்படும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )