தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக வவுனியாவில் பிரச்சாரம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து ஒழுங்கு செய்யப்பட்ட பிரச்சாரக் கூட்டம் இன்று மாலை வவுனியாவில் நடைபெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பிரச்சாரக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டார்கள்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )