சமகி ஜனபலவேகயவின் தேர்தல் விஞ்ஞாபனம்; இரண்டு வருடங்களாக விவாதிக்கப்பட்டதாக தெரிவிப்பு

சமகி ஜனபலவேகய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்; இரண்டு வருடங்களாக அறிஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களால் விவாதிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

அதில் 27 பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்கிரமரத்ன இதனைத் தெரிவித்தார்.

உலகில் ஊழல் நிறைந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை கருதப்படுகிறது. நாட்டில் ஊழல் தடுப்பு ஆணையம் செயற்படுகிறது.

ஆனால் அதை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அது குறித்து சமகி ஜனபலவேக கட்சி கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது,

ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு எண்ணை வழங்குவதன் மூலம் பல பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளை குறைக்க உதவும். தொழில்நுட்பத்தை அதிகபட்சமாக பயன்படுத்தி சமூகத்தில் அநீதியை தடுக்கும் திட்டங்களை சமகி ஜனபலவேகய கட்சி முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல், திறமையற்ற பொதுச் சேவையை மேலும் வினைத்திறனாக்குதல் போன்ற பல விடயங்கள் குறித்து தமது கட்சி கவனம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )