இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான செஸ் வரி குறைப்பு.

இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்காக விதிக்கப்பட்ட செஸ் வரி குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 6ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ சீமெந்துக்கான செஸ்வரி ஒரு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, சிறிய பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் செயற்கை வண்ணம் அல்லது சாயம் பூசப்படாத வெள்ளை சீமெந்துக்கான செஸ் வரியும் குறைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )