ஏற்றுமதியாளர்களின் வருமானத்தை ரூபாவாக மாற்றுவதற்கான காலக்கெடு

ஏற்றுமதியாளர்களின் வருமானத்தை ரூபாவாக மாற்றுவதற்கான காலக்கெடு

ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாயாக மாற்றுவதற்கான காலக்கெடு தளர்த்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் பொருளாதார அபிவிருத்திகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி சட்டத்தின் கீழ், பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான காலக்கெடுவை தளர்த்துமாறு மத்திய வங்கி விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது. அதற்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )