ஜனாதிபதி வேட்பாளர் விவாதத் தொடரின் முதலாவது விவாதம் இன்று.

மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் விவாதத் தொடரின் முதற்கட்ட விவாதம் இன்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.

வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ, திலித் ஜயவீர, நாமல் ராஜபக்ஷ மற்றும் பி.அரியநேத்திரன் ஆகியோர் விவாதத்தில் பங்கேற்பதை உறுதிசெய்துள்ளனர்.

இன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை 200ற்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடக வலையமைப்புகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத் தொடரில் 16 ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளதாக பெஃபரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

விஜயதாச ராஜபக்ஷ, நுவான் போபகே, சரத் மனமேந்திர, அனோஜ் டி சில்வா, பிரியந்த விக்கிரமசிங்க, பாணி விஜேசிறிவர்தன, மயில்வாகனம் திலகராஜா ஆகியோர் நாளைய விவாதத்தில் பங்கேற்கவுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )