ஜனாதிபதியின் திறமை காரணமாகவே நாட்டிற்கு சர்வதேச மதிப்பு – பிரதமர்

தற்போதைய ஜனாதிபதி தனது அரசியல் அனுபவத்திற்கு அமைய செயற்பட்டதன் காரணமாகவே இலங்கைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சரியான முடிவுகளினால் மக்களுக்கு நிம்மதி கிடைத்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதியின் சரியான நிர்வாகத்தினால் அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் ஏனைய சலுகைகள் கிடைத்தன.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் சம்பளத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டைக் கட்டியெழுப்ப எதிர்க்கட்சிகளிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை.

அவர்கள் பயந்து ஓடிய போது ரணில் விக்கிரமசிங்க சவாலை ஏற்றுக்கொண்டதாகவும் பிரதமர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )