லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம் ஏற்படாது.

மாதாந்த சமையல் எரிவாயு விலை திருத்தத்தின்படி, இந்த மாதம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று, லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 2ம் திகதி எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மூவாயிரத்து 690 ரூபாவாகும்.

ஐந்து கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரத்து 482 ரூபாவாகும். 2.3 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் 694 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )